திருக்கடையூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மூடி கிடக்கும் சுற்றுலா விடுதியை திறக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அபிராமி உடனாகி அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் மற்றும் ஆயுள் விருத்தி திருமணங்கள் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் பக்தர்கள் தங்குவதற்கு 20க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த நிலையில் திருக்கடையூர் பேருந்து நிலையம் அருகே சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு சுற்றுலா விடுதி கட்டப்பட்டு 2008 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது இதில் நாள் தோறும் சுற்றுலா பயணிகள் அங்கு உள்ள அறைகளில் குறைவான வாடகையில் தங்கி வந்தனர். இதனால் ஊராட்சிக்கு வருமானமும் வந்தன. இந்த நிலையில் கடந்த 1- ஆண்டுக்கும் மேலாக சுற்றுலா விடுதி திறக்கப்படாமல் பூட்டி கிடைக்கின்றன. இது குறித்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் சுற்றுலா விடுதியை திறக்க பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மூடி கிடக்கும் சுற்றுலா விடுதியை அரசு அதிகாரிகள் பார்வையிட்டு சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் ஊராட்சிக்கு வருவாய் கிடைக்கும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments